சிறப்பான பலன்களை பெற்றுதரும் குத்துவிளக்கு வழிபாடு...! | bairava peedam

சிறப்பான பலன்களை பெற்றுதரும் குத்துவிளக்கு வழிபாடு...!! இந்து சமய வழிபாட்டில் குத்துவிளக்கு மிக முக்கிய அங்கமாய் இருக்கின்றது. காமாட்சி அம்மன் விளக்குக்கு இணையாக தெய்வீக அம்சம் பொருந்திய இந்த குத்து விளக்கை ஏற்றுவதன் மூலம் பஞ்ச பூத சக்தியையும் கவர்ந்திழுத்து இறையருளை முழுமையாக நமக்கு பெற்று தரும். அதனாலாயேதான் சுப நிகழ்ச்சிகளின் போதும், வழிபாட்டின்போதும் குத்துவிளக்கேற்றுவதை வழக்கப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். குத்துவிளக்கின் அடிப்பாகம் பிரம்ம தேவரையும், நடுப்பாகம் மகாவிஷ்ணுவையும், மேல்பாகம் ஈஸ்வரனையும் அம்சமாய் கொண்டுள்ளது. விளக்கில் ஊற்றும் நெய்யானது நாதம் என்றும், திரியானது பிந்து என்றும், சுடர்விட்டு எரியும் சுடர் ஆனது உலக இயக்கங்களுக்கு அடிப்படையான சக்தியின் அம்சமான மலைமகளையும் குறிக்கிறது. பஞ்சபூத சக்தியினை அடிப்படையாக செயல்படுவதை குறிக்கும்விதமாக விளக்கிற்கு ஐந்து முகங்கள் இருக்கிறது. குத்து விளக்கை ஏற்றும் பொழுது நிறைய ஆகம விதிகள் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். பலபேர் இன்றைய அவசர காலக்கட்டத்தில் அவற்றையெல்லாம் பின்பற்ற...