1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 😎 கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். *1) பெண் சாபம் இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும். *2) பிரேத சாபம் இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும். *3) பிரம்ம சாபம்:* நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும். *4) சர்ப்ப சாபம்:* பாம்புகளை தேவையின்...