ஶ்ரீ சரஸ்வதி அஷ்டோத்தர சதநாமாவளி :

ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அறியாமை அழிப்பவளே போற்றி
ஓம் அண்டியோர்க்கு எளியவளே போற்றி
ஓம் அறிவுக்கடலே போற்றி
ஓம் அளத்தற்க்கரியவளே போற்றி

ஓம் அன்னவாகினியே போற்றி
ஓம் அகில லோக குருவே போற்றி
ஓம் அருள்பவளே போற்றி
ஓம் அனைத்து விஞ்ஞானமாய் போற்றி
ஓம் அற்புதங்களுக்கு ஆதாரமே போற்றி

ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆசானாய் அருகிலுருப்பவளே போற்றி
ஓம் ஆனந்த ரூபினியே போற்றி
ஓம் ஆதிபராசக்தியாய் போற்றி
ஓம் ஆக்கப்பூர்வ அறிவு களஞ்சியமே போற்றி


ஓம் இகபரசுகமருள்பவளே போற்றி
ஓம் இறைவியே போற்றி
ஓம் இசைவடிவே போற்றி
ஓம் இல்லறத்தின் ஆதாரமே போற்றி
ஓம் இயற்கையில் வியாபித்தவளே போற்றி

ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உயர் அறிவுக் கடலே போற்றி
ஓம் உவமையில்லாதவளே போற்றி
ஓம் உய்யவழியே போற்றி
ஓம் உய்விப்பவளே போற்றி

ஓம் ஊழ்வினை அழிய ஆதாரமே போற்றி
ஓம் ஊமைக்கு அருள்வோய் போற்றி
ஓம் ஊக்கத்திற்கான அறிவே போற்றி
ஓம் ஊராரை சிறக்க அருள்பவளே போற்றி
ஓம் ஊற்றான கல்விஞானமே போற்றி

ஓம் எண்ணாய் போற்றி
ஓம் எழுத்தாய் போற்றி
ஓம் எண்ணத்தின் ஊற்றே போற்றி
ஓம் எங்கும் எதிலும் மிளிரும் அறிவு
சுடராய் போற்றி
ஓம் எப்போதும் மிளிரும் அறிவாய் போற்றி

ஓம் ஏடேந்தியவளே போற்றி
ஓம் ஏழிசையாய் போற்றி
ஓம் ஏழைக்கும் அறிவால் ஏற்றமருள்பவளே
போற்றி
ஓம் ஏழேழு உலகிற்கும் ஆதாரமே போற்றி
ஓம் ஓங்கார வடிவே போற்றி !

கலைகளுக்கெல்லாம் அதிபதியானவளே
உந்தன் அருளும் வரமும் அனைவர்க்கும் தரவே வேண்டுமம்மா !
ஶ்ரீ சரஸ்வதியின் திருவடிகளுக்கு சரணம்
சரணம் சரணமம்மா !!!

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை