சனி தோஷத்தை நீக்கும் எளிய பரிகாரங்கள்.!

சனி பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி, கர்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி, கண்டக சனி என எல்லாவித சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் மிக எளிய பரிகாரங்கள் உள்ளன.

தினமும் சூரியன் எழுவதை தரிசித்து மூன்று முறை சூரியனுக்கு நல்லெண்ணெய் பூமியில் வார்க்கலாம். பின்பு மூன்று முறை நீர் வார்க்கவும்.

தினமும் காக்கைக்கு சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பின்பு கருப்பு எள் கலந்து, சிறு உருண்டைகளாக மூன்று பிடித்து வைக்கலாம். பின்பு நாய்க்கு உணவிடவும். கருப்பு எள்ளு, உளுந்து மற்றும் சர்க்கரை சேர்த்து பொடி செய்து தினமும் எறும்புகளுக்கு இட்டு வரலாம்.

முடிந்த பொழுது சிவன் கோவில்களை சுத்தம் செய்தல் நலம். ஒவ்வொரு சனி இரவு 8-9 வேளையில் அரச மரத்தடியில் இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வரலாம்.

உணவில் அதிகம் மிளகு சேர்த்து கொள்ளலாம். மேலும் காலை உணவிற்க்கு முன் மூன்று கருப்பு மிளகு கடித்து சுவைத்து உண்டு வரவும்.

சனியால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், சனிக்கிழமையில் எமனையும் பிரஜாபதியையும் வழிபடுவது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதும், ஹனுமன் சாலீஸா படிப்பதும் மிகவும் நல்லது. வன்னி சமித்தால் ஹோமம் செய்வதும் எள் தானம் செய்வதும் சிறப்பாகும்.

ஒருமுறை திருநள்ளாறு திருத்தலத்துக்குச் சென்று, ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரையும், சனி பகவானையும் முறைப்படி வழிபட்டு வாருங்கள். வயோதிகர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவுங்கள்.



Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்