எறும்புகளுக்கு செய்யும் தர்மம்... ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலை முறையில் நீங்கள் செய்த பாவங்களும்,அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம், எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது- அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா,புக்தி நடக்கும் காலங்களில்.அல்லது அஷ்டமச் சனி ஜென்ம சனி நடக்கும் காலங்களில்- சனி பகவான்,தயவு ,தாட்சண்யமின்றி- கொடுமையாக தண்டிக்கிறார். கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம்- யாரும் சனியோட கடுமையால் பாதிக்க படக் கூடாதுங்கிறதுக்காக சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம். பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்து விட்டு,விநாயகப் பெருமானை மூன்று சுற்றி சுற்றி விட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும். அப்படித் தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டுப் போய் விடும். வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால், அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும். அப்படித் தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழ...