
# ஸ்ரீகாலபைரவர் # vijaaiswamiji # bairavafoundation # bairavapeedam 💥 💥 ஸ்ரீ காலபைரவர் வழிபாடு! 💥 💥 பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவனின் தத்புருஷ முகத்தில் இருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர்.காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்த சாமபூஜை முடியும் போதும் இவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.இன்று 01/10/2019 செவ்வாய்க்கிழமை பதிவு செய்து வணங்கி மகிழ்கின்றோம் ஓம் பைரவா போற்றி ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை சிவபெருமானின் அம்சம் ஸ்ரீ காலபைரவர் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து வருகிறார். திரிசூல பாணியான இவர், நீலநிற மேனியுடன், நிர்வாண கோலத்தில் நாய் வாகனத்துடன் காட்சி தருவார். சிவாலயங்களில் வடகிழக்கு திசையில் இவருக்கு தனி சன்னிதி உண்டு. காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்த சாமபூஜை முடியும் போதும் இவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவத்தை போக்குபவர் என்று பொருள். தினமும் வேதனையை அனுபவிப்பவர்கள், தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்க...