அதாவது ஆஞ்சநேயர் ஜெனனநாள். இந்த நாளில் ஆஞ்சநேயர் பிறப்பு மற்றும் அவரை வழிபடுவது பற்றியும் பார்ப்போம் . ஆஞ்சநேயர் மனதை தம் வசப்படுத்தும் முயற்சியில், மனிதனுக்கே எடுத்துக்காட்டாக விளங்கினார். அதனால், அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றியின் நாயகனாக விளங்கினார். அவரது வெற்றிக்கு காரணம் திட்டமிட்ட செயல், கடலையும் தாண்டும் தைரியம், சமயோசிதம், பக்தி ஆகியவையே. அவர், மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தார். இந்த ஜெயந்தி நன்னாளில், அவரது வரலாறைப் படிப்போமா! புஞ்ஜிகஸ்தலை என்ற பெண்மணி, தேவலோகத்தில் வசித்தாள். மிகுந்த அழகியான அவள், தன்னை விட அழகி யாருமில்லை எனக் கருதி, ஆணவத்தால், ஒரு முனிவரின் தோற்றத்தை கேலி செய்து பேசினாள். கோபமடைந்த முனிவர், அவளது அழகு அழிந்து, குரங்காக மாற சாபமிட்டார். அவள், அவரிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடினாள். இரக்கப்பட்ட முனிவர், சாப காலம் முடியும் வரை நினைத்த நேரத்தில், நினைத்த வடிவம் எடுக்கும் வரம் தந்தார். பூலோகத்தில் வசித்த குஞ்சரன் என்பவனுக்கு மகளாகப் பிறந்தாள். அவளுக்கு, “அஞ்சனை’ என்று பெயரிட்டனர். ஒருமுறை, அவள் ஒரு மலையுச்சியில், மானிட வடிவில் மிக...