ஈடில்லா ஏகாதசி:-

வைணவ வழிபாட்டில் ஏகாதசி அன்று மாகவிஷ்ணுவை வழிபடுவதற்கு சிறப்பு பலன்கள் உண்டு என்று சமய நூல்கள் கூறுகின்றன. வருடத்தில் 12 மாதங்களிலும் 24 ஏகாதசிகள் வருகின்றன. இந்த 24 ஏகாதசிகளுக்கும் தனித்தனிப் பெயர்களும், அதற்கான பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அது குறித்த விவரங்கள்... மார்கழி மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு வைகுண்ட ஏகாதசி என்று பெயர். இதற்கு மோட்சதா என்று வேறு ஒரு பெயரும் உண்டு. இறைவன் அனுக்கிரகம் செய்து காட்டும் அத்யயனோத்ஸவம் இந்த நாளில் கொண்டாடப்படும். தை தை மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு சபலா என்று பெயர். இது பல மடங்கு பலன் தரவல்லது.தை மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு புத்ரதா என்று பெயர். இந்நாளில் விரதம் இருப்பவர்களுக்கு பித்ருசாபம் விலகும். நல்ல குழந்தைகள் பிறக்கும்.அன்றைய தினம் எள் கலந்த நீரில் நீராடித் தலையில் கொஞ்சம் எள்ளைப் போட்டுக் கொண்டு எள்ளால் ஹோமம் செய்து எள்ளையே ஆகாரமாகக் கொண்டு, எள்ளைத் தானம் செய்வது போன்ற காரியங்களை எள்ளினால் செய்வார்கள். மேலும் படிக்க:http://goo.gl/x61yPM