வாழ்வை வளமாக்கும் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம்

கால் பெருவிரல் ரேகைகளில் வில்வக்கோடுகள், வாகைக்கோடுகள், நாகக்கோடுகள், சங்குக்கோடுகள், சுரியக்கொடுகள், வருணக்கோடுகள், சக்கரக்கோடுகள், கத்தரிக்கோடுகள், கூர்மக்கோடுகள், அந்திமக்கோடுகள், சந்திரக்கோடுகள், குழிமுகம், கருடமுகம், கோமுகம் என இன்னும் பல்வேறு கோடுகள் பல்வேறு மனிதர்களின் கால் பெருவிரல் ரேகைகளில் மாறி, மாறி அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் கூட ஒரே மனிதரின் கால் பெருவிரல் ரேகையில் அமைந்திருக்கும் வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையை உன்னத நிலைக்கு கொண்டு செல்லும். உதாரணமாக ஒருவருடைய கால் பெருவிரல் ரேகையில் வருணக் கோடுகள் அமைந்திருக்குமானால் அவர் அதிகமாக யாருடனும் தொடர்பு கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார். சதா காலமும் தன் குடும்பம் பற்றியே சிந்திப்பவர். அந்தக் கோடுகளுடன் சுரியக்கோடுகளும் அவருக்கு அமைந்து இருந்தால் அவர் எப்போதும் பணத்தில் புரளும் நிலை நாளடைவில் உருவாகும். இதுவும் ஆராய்ச்சியின் மூலம் கண்ட உண்மை. வாகைக்கோடுகள் அமையப்பெற்றவர், எல்லோருக்கும் வளைந்து கொடுப்பவர், மரியாதை மிக்கவர். ஒரு குறிக்கோளை மனதில் இரகசியமாக வைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறத்துடிப்பவர். அவர் எடுக்கும் முயற்சிகளில் சிறு மாற்றம் செய்தால் வளமான வாழ்க்கையைப் பெறுவது நிச்சயம். அவர் செய்ய வேண்டிய மாற்றம் அவருடைய கால் பெருவிரல் ரேகைகளின் மூலம் கண்டறிய முடியும். கால் பெருவிரல் ரேகையில் குழிமுகம் இருந்தால் அவருடைய வாழ்க்கை சரிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும். அவரது கால் பெருவிரல் ரேகையின் மூலம் அவர் எந்தத் தெய்வத்தினை எந்தெந்தப் பூஜைப்பொருட்கள் மற்றும் மலர்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் கண்டறிந்து அதன்படி அவருக்கு உரிய நேரத்தில் பக்தி சிரத்தையுடன் மூன்று பௌர்ணமி நாட்களில் கும்பிட்டு வந்தால் அவருடைய வாழ்க்கை ஒளிமமாகும். மேலும் படிக்க :http://goo.gl/4CjjlZ

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :