கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற பரிகாரம் :

ஒரு சுத்தமான இரும்புத் தட்டு ஒன்று எடுத்துக் கொள்ளவும்.ஒரு கற்பூரத்தைத் தரையில் ஏற்றி அதற்குச் சில அங்குலம் மேல் அந்தத் தட்டைக் கவிழ்த்துப் பிடிக்கவும்.அதில் புகைபட்டு, கரி பிடிக்கும்.அந்தக் கரியைத் தொட்டுத் தெற்கு நோக்கி அமர்ந்து, ஒரு தூய்மையான வெள்ளை நிறப் பேப்பரில் யார் பணம் தர வேண்டுமோ அவருடைய பெயரை வலது கை நடுவிரலால் எழுதவும்.எழுதும் பொழுது அவர் முகத்தை மனதில் நிறுத்தி அவர் விரைவில் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டே எழுதவும்.

பின்னர் அந்தப் பேப்பரை மடித்து அதன் மேல் ஒரு கனமான பொருள் அல்லது கல் ஒன்றை வைத்து விடவும்.விரைவில் அந்தப் பணம் உங்களிடம் வந்து சேரும்.இதை வியாபாரிகள்,தனி நபர்கள்,தொழில் செய்பவர்கள், நிறுவனங்கள் நடுத்துபவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.


Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்

பைரவர பகவான் மந்திரங்கள்