நாகசதுர்த்தி!

ஆடி அல்லது ஆவணி வளர்பிறை சதுர்த்தி நாளில் மேற்கொள்ளும் விரதம் நாகசதுர்த்தி. இந்நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர்.அனந்தன், வாசுகி, குஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் ஒன்பது நாகங்கள் தெய்வத்தன்மை மிகுந்தவை. இந்த நாகங்களின் பெயர்களைச் சொல்லி, நமது கோரிக்கைளை நிறைவேற்றித் தரும்படி இந்த நாளில் வேண்டிக்கொள்ளலாம். திருமணத்தடை, தீர்க்க சுமங்கலி பாக்கியம், வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க, இந்நாளில் பெண்கள் விரதம் மேற்கொள்ளலாம். அன்று வாசலில், சிறிய அளவில் பாம்புக்கோலம் இட வேண்டும். பாம்புக்கிரகங்களான கேது, ராகுவின் அதிபதிகளான விநாயகர், துர்க்கையை மனதில் நினைத்து, செயல்பாடுகளில் உள்ள தடையை நீக்க பிரார்த்திக்க வேண்டும். அன்று பகலில் பால், பழமும், இரவில் எளிய உணவும் சாப்பிடலாம். பாம்பு தீண்டி இறந்த தன் சகோதரர்களைக் கண்டு வருந்திய பெண் ஒருத்தி நாகராஜரை வேண்டி பூஜித்தாள். நாகராஜரும் மகிழ்ந்து, அவளுடன் பிறந்த ஐந்து சகோதரர்களையும் உயிர் பிழைக்கச் செய்தார்.

இந்த நிகழ்ச்சி நடந்த நாளாக நாக சதுர்த்தி கருதப்படுகிறது. இந்நாளில் நாகர்கோவில் நாகராஜா கோவில், பரமக்குடி அருகிலுள்ள நயினார்கோவில், கொழுவூர், நாகப்பட்டினம், கும்பகோணம் ஆகிய ஊர்களிலுள்ள நாகநாதர் கோயில்களுக்குச் சென்று வணங்கி வரலாம்.


Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்

பைரவர பகவான் மந்திரங்கள்