ஸர்ப்ப தோஷம் விலக பைரவர் வழிபாடு :

ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னம் அல்லது 2 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது நின்றால் அது ஸர்ப்ப தோஷம் ஆகும்.வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவருக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும்;புனுகு பூச வேண்டும்;நாகலிங்கப்பூமாலை அவருக்கு சார்த்த வேண்டும்;பால் பாயாசம்,பால் சாதம் இவைகளை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.நமது பெயருக்கு(யாருக்கு ஸர்ப்ப தோஷம் இருக்கிறதோ,அவர் பெயருக்கு) அர்ச்சனை செய்ய வேண்டும்;அதன்பிறகு,கால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து கொண்டு காலபைரவர் 108 போற்றி அல்லது காலபைரவர் 1008 போற்றி அல்லது காலபைரவர் அஷ்டோத்திரத்தை மனதுக்குள் ஒருமுறை ஜபிக்க வேண்டும்.பிறகு நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.
லக்னம் அல்லது இரண்டாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்து ராகு மஹாதிசை அல்லது கேது மஹாதிசை வந்தால்,அந்த திசை முழுவதும் வாரம் தவறாமல் இந்த வழிபாட்டைச் செய்து வர வேண்டும்.
இந்த திசை முழுவதுமே அசைவம்,மது,போதைப்பொருட்களை கைவிட வேண்டும்.அவ்வாறு கைவிட்டு இந்த வழிபாட்டைச் செய்து வந்தால்,ராகு மற்றும் கேதுவால் ஏற்பட இருக்கும் அவமானங்கள் படிப்படியாக விலகிவிடும்.நிம்மதியும்,சிறந்த வாழ்க்கைத்துணையும் அமைந்துவிடும் என்பது அனுபவ உண்மை ஆகும்.

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்