பைரவர் வாஸ்து பூஜை எப்போது செய்யலாம்?

வாஸ்து தோஷம், முச்சந்தி வீடு, இடுகாட்டுக்கு அருகில் உள்ள வீடு, அல்லது ஒரு சிலருக்கு புதியதாக வீடு குடி போனதில் இருந்து எதுவுமே துலங்காமல் இருக்கும்.எப்பவும் கெட்ட சம்பவங்கள் அல்லது சகுனங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விசயமே நடக்காது, எவ்வளவோ பரிகாரம் செய்தும் நீங்கியிருக்காது.

இப்படிபட்ட அமைப்பில் உள்ள வீடுகளில் எப்போதும் எதாவது குறையோ தோஷமோ இருந்து கொண்டே இருக்கும். இப்படிபட்ட தோஷங்கள், குறைகள் நீங்க வீட்டின் நான்கு மூலையிலும் ஒரு விளக்கு என நான்கு விளக்கு பைரவரை நினைத்து கொண்டு 90 நாட்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும்.


90 நாள் என்பது ஒரு கணக்கு தான் நமக்கு இப்போ ஓரளவு பரவாயில்லை பிரச்னை இல்லை அப்படியென்று நாம் உணரும் வரை விளக்கு போட்டு வரலாம். வாழ்நாள் முழுமையும் கூட விளக்கு போடலாம்.

ஒருவேளை வீட்டுக்கு வெளியே விளக்கு போட்டால் யாரவது எதாவது நினைப்பார்கள் என்று நினைத்தால், வீட்டுக்கு உள்ளேயே நான்கு மூலைக்கும் விளக்கு ஏற்றலாம், விளக்கு எரிந்து முடியும் வரை கவனமாக இருக்க வேண்டும்.விளக்கு ஏற்றும் போது பைரவர் கவசம், பைரவர் காயத்ரி, பைரவர் ஸ்லோகம், ஸ்துதி, பைரவர் போற்றி என ஏதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே விளக்கு ஏற்றலாம்.

இவ்வழிபாட்டினை ஆரம்பிக்கும் முன் பைரவர் கோவிலுக்கு சென்று அங்கு விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி பிறகு பைரவருக்கு ஒரு விளக்கேற்றி அனுமதியும் ஆசிர்வாதமும் பெற்று பிறகு வீட்டிற்கு வந்து விநாயகரை வணங்கி அவருக்கும் ஒரு விளக்கேற்றிய பிறகே பைரவரை நினைத்து விளக்கு போட வேண்டும்.

இந்த வழிபாட்டினை செய்ய ஆரம்பிக்க மிகவும் உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி, வாஸ்து நாள், பௌர்ணமி தினங்களாகும்.

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்

பைரவர பகவான் மந்திரங்கள்