நமசிவாய !! நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அருளிக்கொண்டு இருப்பவனை, இதை எனக்கு வழங்கவேண்டும், அருளவேண்டும், காக்கவேண்டும் என்று உரிமையுடன் கேட்கவும் ஒரு தகுதி கண்டிப்பாக வேண்டும் !! அப்படி கேட்டால் கண்டிப்பாக அருள்வார் கருணை கடவுள் !! என்னதான் அந்த தகுதி ? சிந்தையால் !! செய்கையால் !! உணர்வால் !! அனைத்தாலும் !! ஈசனை மட்டும் சிக்கென பற்றி, சிவத்தை முன்னிறுத்தி, ஈசனிடம் கூறி, எதையும் செய்யுங்கள் !! செயல்படுங்கள் !! அதுதான் தகுதி !! இப்படித்தான் இருக்கிறேன் என்று நினைத்தாலும் சில விசயங்களில் நாமும் மறந்து விடுகிறோம் என்பதே மெய் !! இப்படி சிவத்தை முன்னிறுத்தி, ஈசனிடம் கூறி, எதையும் செய்துவிட்டு அதில் ஏதேனும் இடையூறோ, தடங்கலோ, வந்தால் உரிமையுடன் “ பெருமானே தங்கள் திருவடியை நெஞ்சில் நிறுத்தி, தங்கள் நாமம் சொல்லி, தங்கள் திருவருளை மட்டுமே முன்னிறுத்தி இந்த செய்கையை செய்துள்ளேன் நீங்கள் தான் பொறுப்பு “ என்று உரிமையுடன் கேட்க உரிமை உண்டு, அதைவிடுத்து உங்கள் இஷ்டத்திற்கு எதையாவது செய்து விட்டு, இதில் இருந்து காப்பாற்று என்று கெஞ்சத்தானே முடியும், “ ஈசனே நீயே எல்லாமுமாய் எதையும் ச...