இன்று கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்!!(08.11.2018) :


கந்த சஷ்டி விரதம் இன்று ஆரம்பமாகிறது. இன்று தொடக்கம் ஆறு நாட்கள் இந்து மக்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள்.

நாடெங்கிலும் உள்ள முருகன் ஆலயங்களில் இடம்பெறும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி விசேட பூஜை நிகழ்வுகளும் சிறப்பான ஒன்றாகும்.

எவ்வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமான விரதமாக கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.


இவ்விரதத்தை இந்துக்கள் சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், சிலர் முதல் ஐந்து நாட்கள் ஒரு நேரம் பாலும் பழமும் மட்டும் உட்கொண்டு கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்து அனுஷ்டிப்பர். ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின்னர் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

இவ்விரதத்தின் ஆறாம் நாளான கடைசி நாள் முருகப்பெருமான் சூரனை வதம்செய்யும் சூரசம்ஹார நிகழ்வுடன் இந்த விரதம் நிறைவுபெறுக்கின்றது.


Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்