கணவன் மனைவி பிரச்னைகள் தீர பைரவர் வழிபாடு :
புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.இந்த இரண்டு கிழமைகளும் செய்யக் கூடாது.ஏதாவது ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, 8 வாரங்கள் இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.
நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் உள்ள காலபைரவருக்கு வில்வமாலை அணிவிக்க வேண்டும்.நமது பெயர் மற்றும் நமது வாழ்க்கைத்துணை(கணவன் எனில் மனைவி, மனைவி எனில் கணவன்)பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;அர்ச்சனை செய்தபின்னர்,பைரவர் 108 போற்றி அல்லது பைரவர் 1008 போற்றியை அவரது சன்னதியில் அமர்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும்.(வாய்விட்டுச் சொல்லக்கூடாது).
Comments
Post a Comment