#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam
#அமாவாசை #ammavasai
அமாவாசை....
அமாவாசை அல்லது அமைவாதல் அல்லது மறைமதி என்பது சந்திரன்தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். வானியலின்படி, பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமைவாதை யாகும். சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்குச் சந்திரன் தெரிகிறது. ஆனால் சந்திரன் புவிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது சூரிய ஒளி புவியிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாத சந்திரனின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதனால் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது. சந்திரமானம் எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் அமைவாதை நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது. அமைவாதை வரும் நாள் கணிப்புதொகு இரண்டு அமைவாதைகளுக்கு இடையேயுள்ள கால இடைவெளி எப்பொழுதும் சமனாக இருப்பதில்லை.
இக் காலப்பகுதி, அதாவது ஒரு சந்திர மாதம் சுமார் 29.53 நாட்கள் அளவுள்ளது. அமாவாசையில் சந்திரனும், சூரியனும் நேருக்கு நேர் வரும் நேரத்தைக் கணிப்பதற்கு ஒரு அண்ணளவான சமன்பாடு உண்டு. அது கீழே தரப்படுகிறது. d = 5.597661 + 29.5305888610 x N + (102.026 x 10-12) x N2 இதிலே N 2000 ஆம் ஆண்டின் முதல் அமைவாதையன்று 0 இல் தொடங்கி ஒவ்வொரு சந்திர மாதத்துக்கும் 1 ஆல் கூடிச்செல்லும் ஒரு முழு எண்ணாகும். d2000-01-01 00:00:00 இலிருந்து குறித்த அமைவாதை வரையுள்ள நாட்களினது எண்ணிக்கையாகும். திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று.
சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. முன்னோர்கள் இறந்த தேதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பது உகந்தது. மூதாதையர்கள் உயிருடன் வாழ்ந்தபோது, அவர்களை சரிவர கவனிக்காததால், அவர்கள் அடையும் துன்பங்கள் யாவும், பாவத்தின் வடிவில் கவனிக்கத் தவறியவர்களை சேர்வதாக கூறப்படுகிறது.
பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மை பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள்.
‘ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். பித்ரு லோகம் என்பது சூரியனுக்கு அப்பால், பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும், வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர்.
அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றை போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி சந்ததியரை வாழ்த்துவார்கள். அமாவாசையன்று தங்களுக்கு வழங்கப்படும் எள் தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பித்ருக்கள் காத்து நின்று கொண்டிருப்பார்களாம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தை அமாவாசை சிறந்த நாளாகும். அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர்களை நினைத்து திதி கொடுக்கலாம். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு போன்ற திருத்தலங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்று சூரிய வழிபாடு செய்வது அவசியம். இறந்தவர்களின் நாள், தேதி தெரியாதவர்களும், வருடத்தின் 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம். இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். அன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்ய வேண்டும். மறைந்த தாய், தந்தை படங்களுக்கு மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வணங்க வேண்டும். அன்று காகம் வடிவில் மூதாதையர்கள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பதும் முக்கியம்.
வழிபடுவது எப்படி…
அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்தி வைக்க வேண்டும் .
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006,
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org

www.swarnabhairavapeedam.o
Comments
Post a Comment