#குருபெயர்ச்சி
💥💥குருபெயர்ச்சி💥💥
தென்குடித்திட்டை குருபெயர்ச்சி விழா 2019...
சிறப்பு பதிவு...
குருபெயர்ச்சி விழா தேதி 29/10/2019 அதிகாலை 3.49 மணி குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார்... தென்குடித்திட்டை குருபகவான் திருவடிகளே சரணம்...
திட்டை குரு ஸ்தலம் சில குறிப்புகள்
1. தலத்தின் பெயர் : திட்டை குரு பரிகார ஸ்தலம்
2. இறைவன் பெயர் அருள்மிகு வசிஸ்டேஸ்வரர்
3. வேறு பெயர்கள்...
பசுபதீஸ்வரர், தான்தோன்றிநாதர், அனந்தேஸ்வரர், தேரனார்.
4. இறைவியின் பெயர்... உலகநாயகி என்னும் மங்களாம்பிகை, சுகந்த குந்தளாம்பிகை.
5. சிறப்பு மூர்த்தி...
குருபகவான் தனி சந்நிதியின் தனி விமானத்துடன் சுவாமிக்கும் அம்பாளுக்கும் இடையில் இராஜகுருவாக எழுந்தருளியுள்ளார்.
6. எப்படிப் போவது...??
தஞ்சை நகரிலிருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில் 10 - வது கிலோமீட்டரில் திட்டை உள்ளது.
7. வேறு சிறப்பு...
மற்ற குரு ஸ்தலங்களில் தெட்சிணாமூர்த்திக்கே குருபெயர்ச்சி நடத்தப்படுகிறது இத்தலத்தில் மட்டும்தான் குருவுக்கு பெயர்ச்சி விழா கொண்டாடப்படுகிறது.


8. போக்குவரத்து வசதிகள் எப்படி? : தஞ்சையிலிருந்து டவுண் பஸ்கள் நிறைய உண்டு. ஆட்டோ மற்றும் டாக்ஸி மூலமும் செல்லலாம்
9. தங்குமிடம் உணவு வசதிகள் உண்டா..??
தஞ்சை நகரில் ஏராளமான தங்கும் விடுதிகளும், தரமான உணவு விடுதிகளும் உள்ளன. திட்டை சிறுகிராமமானதால் போதுமான வசதிகள் அங்கு இல்லை.
10. எப்போது வரலாம்..??
குருவாரமான வியாழக்கிழமையில் வழிபடுவது சிறப்பு குருபெயர்ச்சி காலங்களில் நாடெங்கும் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு பரிகாரம் செய்து செல்கின்றனர்.
11. யாருக்கு நற்பலன்..??
2, 3, 5, 7, 9, 11.
இடத்தில் இருப்பவர்க்கு.
12. பரிகாரம் செய்துக்கொள்ள வேண்டியவர்கள் யார்..??
1, 2, 4, 6, 8, 10, 12
இடத்தில் இருப்பவர்க்கு.
13. பரிகாரம் என்ன..??
குருப்பெயர்ச்சியில் இருந்து 21 நாட்கள் வரை திட்டை குருபகவானைத் தரிசித்து அர்ச்சனை செய்யலாம். அக்கோயிலில் நடக்கும் இலட்ச்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்களில் பங்கு கொள்ளலாம்.
14. நடை திறந்திடும் நேரம்... காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை...
திட்டைக்கு வருக ! தி (கு)ருவருள் பெறுக !
தென்குடித்திட்டை குருபகவான் திருவடிகளே சரணம்...

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.


Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை