#திந்திரினீஸ்வரர்
💥💥தீராத பிணிகளை நீக்கும் திந்திரினீஸ்வரர்💥💥
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மரகதாம்பிகை உடனுறை திந்திரினீஸ்வரர் கோயில் பல சிறப்புகளை கொண்டது. முற்காலத்தில் இது சிவபெருமான்காடு என்று அழைக்கப்பட்டது. காடு என்பதை வடமொழியில் வனம் என குறிப்பிடுகிறார்கள். புளியமரம் வடமொழியில் திந்திரிணி எனப்படுகிறது. இவ்வூர் புளிய மரங்களால் சூழப்பட்டிருந்ததால் திந்திரிவனம் என பெயர் பெற்று காலப்போக்கில் திண்டிவனம் என மருவி அழைக்கப்படுகிறது. இந்த காட்டில் இருந்து அருள் புரிந்து வந்த ஈசனை திந்திரினீஸ்வரர் எனவும் திண்டிச்சர முடையார் என்ற நாமத்திலும் பக்தர்கள் பக்தியோடு வழிபட்டு வருகின்றனர்.

சோழமன்னன் கட்டிய கோயில்:

இந்த வனத்தில் 1015 ஆண்டுகளுக்கு முன் சோழ வம்சத்தை சேர்ந்த குலோத்துங்க சோழனால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கிழக்கு நோக்கிய ஏழு நிலை ராஜகோபுரம், விமானம் வியாச முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டது. ஆலயத்தின் உள்ளே நீண்ட கொடி மரம், பலிபீடம், ரிஷபம் (நந்தி), இதை கடந்து சென்றால் கருவறையில் திந்திரினீஸ்வரர் பெரிய மூர்த்திலிங்கமாக காட்சி அளிக்கிறார். இடது புறத்தில் மரகதாம் பிகை அம்மன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் விநாயகர், முருகர், சண்டிகேஸ் வரர், நவகிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் முன்புறம் தீர்த்தக்குளம் உள்ளது.


கோயில் சிறப்புகள்:

உத்தியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் தீர இங்குள்ள சிவபெருமானை வழிபாட்டால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். வியாபாரத்தில் முடக்கம் இருந்தால் அது நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தீராத நோய்கள் தீரும். வியாழக்கிழமை தோறும் இந்த ஆலயத்தில உள்ள தட்சணாமூர்த்திக்கும் (குரு பகவான்), வெள்ளிகிழமைகளில் துர்காதேவிக்கும் எலுமிச்சை பழ தீபமிட்டு பிரார்த்தனை செய்து வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

திந்திரினீஸ்வரை மனமுருகி வழிபட்டால் தீராத வினைகள் தீரும், நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இசை விழாவில் பிரபலங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் தேரோட்டத்தை காண கிராம மக்கள் மாட்டு வண்டி கட்டி வந்து  கோவிலில் தங்கியிருந்து தேரோட்டத்தை கண்டு தரிசித்து செல்வார்கள். தேரோட்டத்தையொட்டி கோயிலில் நடைபெறும் இசை விழாவில் பிரபல இசை மேதைகள் கேபி  சுந்தராம்பாள், சீர்காழி கோவிந்தராஜன், பித்துக்குளி முருகதாஸ், ஆலங்குடி  சோமு, பெங்களூர் ரமணியம்மாள், குன்னக்குடி வைத்தியநாதன் போன்றவர்கள் இன்னிசை  கச்சேரி நடத்தியுள்ளார்கள்.

விழாக்கள்:

திந்திரினீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். சித்ரா பவுர்ணமி, ஆனித்திருவிழா, ஆடிபூரம், நவராத்திரி 10 நாள், அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் ஆருத்ரா உற்சவம், சிவராத்திரி, மாசி மகம் ஆகிய விழாக்கள் பிரசித்தி பெற்றவை. செல்வது எப்படி? சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திண்டிவனத்தில் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் திந்திரினீஸ்வரர் கோயில் உள்ளது. ஆட்டோ வசதியும் உண்டு.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.


Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்