லட்சுமி கடாட்சம் கிடைக்கும் நெல்லி இலை :

நெல்லியில் மகாவிஷ்ணு வாசம் செய்வதாக ஐதீகம். எனவே நெல்லிக்கனி அவருக்கு மிகவும் பிடித்தமானது.
நெல்லிக்கு ஹரிப்ரியா என்றும் பெயர் உண்டு. அட்சய திருதியை தினத்தில்தான் அம்பிகையைப் போற்றி கனகதாரா துதியினைப் பாடி தங்க நெல்லிக்கனி மழையைப் பொழியச் செய்தாராம் ஆதிசங்கரர் மகான்.

நெல்லி மரத்தில் திருமாலும் திருமகளும் சேர்ந்து இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி திதியன்று நெல்லி இலை மற்றும் காய்ந்த நெல்லிக்காய்ப் பொடி இடப்பட்ட நீரில் குளித்து, அன்று முழுவதும் விரதம் இருந்து மகாவிஷ்ணு மந்திரங்களை பாராயணம் செய்து வழிபட்டால் செல்வ வளம் பெற முடியும், செல்வம் தங்கும், தரித்திரம் நீங்கும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்