விரதத்தின் போது உண்ணப்படும் பலகாரங்களும் அதன் அர்த்தமும் :

விரத காலத்தில் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம்.
சமஸ்கிருதத்தில் ‘பல்’ என்றால் பழம் என்று பொருள்படும். ‘ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். ‘பல்’ + ‘ஆஹார்’ = ‘பலஹார் ‘ என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று.
இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் ‘பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு. இது உண்மையான விரதம் ஆகாது.
ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே இறை விரதத்தின் நோக்கமாகும்.
எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட பழங்களையும், பாலையும் மட்டும் அருந்தி இறைவனை நினைத்து விரதம் இருப்பதே சிறந்த விரதம் ஆகும்.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை