பிரம்மச்சிரக்கண்டீஸ்வரர் ( பிரம்ம சிரகண்டீஸ்வரர் ) திருக்கண்டியூர் : -

சிவனாரின் அட்டவீரட்ட தலங்களில் முதலாவது கண்டியூர். இங்கு பிரமனின் ஒருதலையைக் கண்டித்துத் துண்டித்ததால் இந்த ஊருக்கு கண்டியூர் எனப் பெயர் அமைந்ததாம். தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது இவ்வூர். இங்கு மேற்குப் பார்த்த சன்னதியில் சிரக்கண்டீஸ்வரர் ( வீரட்டானேஸ்வரர் ) காட்சி தருகிறார், அம்பாள் – மங்களநாயகி.

பிரம்மச்சிரக்கண்டீஸ்வரரின் அற்புத சிற்பம் ஒன்று காஞ்சிபுரம் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலில் உள்ளது. இங்கு ஐந்தில் ஒரு தலையை இழந்து விட்ட பயத்துடன் காட்சி தருகிறார் பிரம்மதேவர். எட்டுக் கரங்களில் ஒரு கரத்தில் பிரம்மகபாலத்தைத் தாங்கி வியோம முத்திரையுடன் காட்சி தருகிறார் பைரவர்.காஞ்சிக்குத் தெற்கில் உள்ள “பெருநகர்” என்பது பிரம்மன் சிவனை வழிபட்ட பிரம்ம நகரம். இங்கு உள்ள தனிச்சன்னதியில் பைரவசிவன் வடிவம் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.



தலச் சிறப்பு: சாதாதாப என்ற முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு ஆதிவில்வாரண்யம் என்றும் பெயருண்டு. இம்முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன், அவருக்குக் காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு. சாதாதாப முனிவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் திருக்கண்டியூர் சொல்லப்படுகிறது. பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் ஈசனுக்கு ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் இத்தலத்தில் மஹாவிஷ்னுவால் நீங்கியது.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்