கால பைரவர் – பூனே :


பூனாவில்கோயில் கொண்டுள்ள கால பைரவர் ஆபத்சகாயராக அருள்கிறார். கனேஷ்பட்டில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள இவ்வாலயம் சிறியதானாலும் மூர்த்தியின் சிறப்பால் பிரசித்தி பெற்று விளங்குகிறது. வாசலில் துவார பாலகர்களும், மேலே நாய் சிலையும் இருக்கிறது. கால பைரவர் ஒரு கையில் திரிசூலமும், மறு கையில் உடுக்கையும், மற்ற இரண்டு கைகளில் பாம்பையும் பிடித்த வண்ணம் தரிசனம் தருகிறார். இங்கு தினமும் ருத்ராபிஷேகம் நடக்கிறது.

கால பைரவரின் இடது பக்கம் அவரது தேவியின் சிலை அமந்துள்ளது.தேவிக்கு நத்து மட்டி, பட்டு உடுத்தி, மலர் மாலைகளால் அலங்கரிக்கிறார்கள். கால பைரவரின் வலப்பக்கம் மஹாராஷ்டிராவின் மதிப்பிற்குரிய ஜோதிபா சிலை உள்ளது. காளாஷ்டமி, கால பைரவர் ஜெயந்தி நாட்களில் அபிஷேகம் செய்து, வெள்ளிக் கவசம் சாத்தி வழிபடுகிறார்கள்.



Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்