ஹோம நெருப்பிலிடப்படும் பட்சணங்கள் தேவதைகளை சென்றடையுமா?

தேவதைகளை மகிழ்வித்து, அவர்களின் அருளாசியை பெறுவதற்காக செய்யபடுவது ஹோமாதிக்காரியங்களாகும்.இதை யாகம் என்றும், யக்ஞம், என்றும் கூறுவார்கள். ஹோமம் செய்யும்போது நெருப்பு வளர்த்து அதில் நவதானியங்கள், அன்னம், பட்சணங்கள், நெற்பொறி முதலிய பொருட்களை ஆகுதியாக நெருப்பிலிடுவார்கள். இவ்வாறு நெருப்பிலிட்ட பட்சணங்கள் குறிப்பிட்ட தேவதையை சென்றடையுமா? எனக் கேட்டால் சென்றடையும் என்பதற்கு தத்துவார்த்தமான விளக்கம் உண்டு.பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பின் தன்மை என்ன வென்றால் நெருப்பு எப்பொழுதும் ஆகாயத்தைப் பற்றி நிற்கும். எனவே பூமியில் நெருப்பு வளர்க்கும் போது, அந்த நெருப்பானது வானத்திற்கும் பூமிக்கும் ஒரு இணைப்பை உண்டாக்கிறது.






அதாவது நெருப்பானது வானத்திற்கும் பூமிக்கும் இடையில் ஊடகமாகச் செயல் படுகிறது. எனவே நெருப்பிலிட்ட பட்சனங்களின் சுவையை வானவர்கள் நெருப்பின் வழியாக பெற்றுக் கொள்கிறார்கள் என்பது ஐதீகம். மேலும் நெருப்பிலிட்ட பட்சணங்கள் யாருக்கு போய் சேரவேண்டும் என்பதை சங்கல்பம் மூலம், பிரார்த்தனை மூலம் தெரிவித்தால் அந்தந்த தேவதைகள் மட்டும் வந்து பெற்றுச் செல்வார்கள்.ஹோமாதி காரியங்கள் செய்யும்போது மந்திரங்கள் ஜெபிக்கபடுகின்றன.

இந்த மந்திரங்களை வானவர்களிடம் எடுத்துச்செல்வதும் நெருப்புதான் எனவே ஹோமாதி காரியங்கள் செய்வது வீண் விரையம் என்று யாரும் நினைக்க வேண்டாம்.


Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்