
# புத்தாண்டு # vijaaiswamiji # bairavafoundation # bairavapeedam 💥 💥 பிறந்தது புத்தாண்டு 💥 💥 இன்று! ஸ்ரீ விகாரி வருடம், மார்கழி மாதம் 16ம் தேதி, 01.01.2020 புதன்கிழமை,ஆங்கில புது வருடப்பிறப்பு. இந்த புத்தாண்டு தொடக்கத்திலிருந்து, அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் ஒரு உறுதிமொழியை இன்றிலிருந்து எடுத்துக்கொள்வோம். அந்த உறுதிமொழி என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, பதிலினை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்? இனி அந்த இறைவனை நினைத்து வேண்டிக்கொள்ளும் போது எனக்கு ‘கெட்டது நடக்க வேண்டாம். பிரச்சினைகள் வர வேண்டாம். உடல் நலத்தில் குறைபாடு வேண்டாம். என் குடும்பத்தை கஷ்டப்படுத்த வேண்டாம்.’ இப்படி வேண்டாம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி வேண்டிக் கொள்வதை நிறுத்திவிடுங்கள். இப்படி நமக்கு நடக்கக் கூடாத கெட்ட விஷயங்களையே நாம் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருக்கும்போது, அது நமக்கு நடந்துவிடுகிறது. நல்ல ‘ஆரோக்கியம் வேண்டும். நிம்மதியான வாழ்க்கை வேண்டும். நன்றாக உழைக்கக்கூடிய மனோ தைரியம் வேண்டும். நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.’ இப்படி வேண்டும...