வேண்டியன அருளும் பட்டீஸ்வரன்

வேண்டியன அருளும் பட்டீஸ்வரன் ஆலயத்தின் கருவறையின் வடக்கு பகுதியில், வட திசை நோக்கி, தன்னை நாடி வரும் பக்தர்களை காக்க வேண்டி, தானே முன் வந்து அழைக்க வருவதுபோல, தனது ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைத்து, ஆறடி உயரத்துடனும், மடிசார் புடவையுடனும், எலுமிச்சை மற்றும் ரோஜா மாலைகளுடனும், எண் கரங்களுடனும், முக்கண்களுடனும், காதுகளில் குண்டலங்களுடனும், புன்னகை வழியும் திரு முகத்துடனும், மகிஷனின் தலை மீது நின்ற வண்ணம் கம்பீரமாக காட்சி தருகிறாள்.அன்னை தன் எட்டு கரங்களில், ஒரு கரத்தை அபயஹஸ்தமாகவும், மறு கரத்தை தன் இடை மீதும் கொண்டு காட்சி அளிக்கிறாள். பட்டீஸ்வரம் துர்க்கை தீமைகளை அழித்து, வெற்றியை அருள்பவள். பரசுராமர் துர்க்கையை வழிபட்டே அமரத்துவம் எய்தினார். போரில் வெற்றி பெற ஸ்ரீராமரும், அர்ச்சுனனும் துர்க்கையையே வழிபட்டனர். மகாபாரதத்தில் வன வாசம் மேற்கொள்ள தர்மரும் துர்கையையே வணங்கினார். சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மும் மூர்த்திகளின் அம்சமும், எமன், இந்திரன் போன்ற தேவர்களின் அம்சமும் தன்னுள் ஒருங்கே கொண்டவள் துர்க்கை. மேலும் படிக்க :http://goo.gl/6axTKY

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்