பஞ்சபூதம்

பஞ்சபூதத் தலங்கள்

நெருப்பு, நீர், காற்று, பூமி, ஆகாயம் என்பன பஞ்சபூதங்களாக கருதப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து உயிர்களும் பொருட்களும் இவை ஐந்தும் கலந்தோ சிலவனவற்றைக் கொண்டோ உருவாக்கி விடலாம். எனவே இவை ஒவ்வொன்றிற்கும் உரிய சிவத்தலம் தென்னிந்தியாவில் உள்ளன.

பஞ்சபூதம் பெயர்க்காரணம்

பஞ்சம் என்பது ஐந்து என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக பஞ்சலோகம் என்பது 5 உலோகங்களின் கலவை எனலாம். இது போல முக்கியமான 5 கூறுகளினை 5 பூதங்கள் அல்லது பஞ்சபூதங்கள் என்பர். ஒவ்வொரு சிவத்தலமும் ஒரு வரலாறு காரணமாகவும், ஏதேனும் ஒரு தன்மையினாலும் அல்லது இயற்கையான நிலவரத்தினாலும் இப்பூதத்திற்குரிய கோயிலாக விளங்குகின்றன.

ஐந்து முக விளக்கும், தீபாராதனைகளும்
• உலகத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்து. அவை வானம், பூமி, காற்று, நீர்:, நெருப்பு.
• உடலில் பஞ்ச பூதங்களும் ஐந்து. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை.
இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு கோவில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்