பூரண கும்பம் .....................
உலகில் உள்ள தாவர சங்கமங்களும் சகல ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன; பிரளய காலத்தில் நீரிலேயே "லயம்' ஆகிவிடுகின் றன. ஆதலால் இறைவனை நீரின்மூலம் உருவ வழிபாட்டிற்கு கொண்டுவருவதே பூரண கும்பத்தின் தத்துவம்.
கும்பம் (குடம்)- உடல்.
குடத்தில் உள்ள நீர்- ரத்தம்.
உள்ளே போடப்படும் ரத்தினங்கள்- சுக்கிலம்.
கூர்ச்சம்- நாடி.
குடத்தின் மேலே சுற்றப்பட்ட நூல்- நரம்புகள்.
குடத்தின் மேலே போடப்பட்ட துணி (வஸ்திரம்)- தோல்.
மந்திரங்கள்- உயிர்.
குடத்தின் மேலுள்ள தேங்காய்- சிரசு, முகம்.
லம்பகூர்ச்சம்- சிகை (முடி).
மாவிலைகள்- ஜடாபாரங்கள்.
"இப்படி மந்திரங்களின் உதவியுடன் அலங்கரிக்கப்பட்ட குடத்தில், சிவனை எழுந்தருளச் செய்கிறோம்' என்று சிவ ஆகமத்தில் சொல்லப் படுகிறது. எனவே பூரண கும்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் இறைவனாக பாவித்து வணங்க வேண்டும். பொருளறிந்து செய்யப்படும் பூசைகள் மூலம் நாள் முழுவதும் இறை உணர்வில் இருக்கமுடியும்.
http://www.bairavafoundation.org/
நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :
1. சொர்ணாகர்ஷண பைரவர்: (ஞாயிறு-சூரியனின் பிராண தேவதை) பைரவி ஓம் பைரவாய வித்மஹே- ஆகர்ஷணாய தீமஹி தன்னோ சொர்ணபைரவ ப்ரசோதயாத் ஓம் த்ரிபுரதயை ச வித்மஹே- பைரவ்யை ச தீமஹி தன்னோ பைரவி ப்ரசோதயாத் 2.காலபைரவர்: (திங்கள்-சந்திரனின் பிராண தேவதை) இந்திராணி ஓம் கால தண்டாய வித்மஹே- வஜ்ர வீராயதீமஹி தன்னோ கபால பைரவ ப்ரசோதயாத் ஓம் கஜத்வஜாயை வித்மஹே- வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ இந்திராணி ப்ரசோதயாத் 3.சண்டபைரவர்: (செவ்வாயின் பிராண தேவதை) கௌமாரி ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே- மஹாவீராய தீமஹி தன்னோ சண்ட பைரவ ப்ரசோதயாத் ஓம் சிகித்வஜாயை வித்மஹே- வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ கௌமாரி ப்ரசோதயாத் 4.உன்மத்த பைரவர்: (புதனின் பிராண தேவதை) ஸ்ரீ வராஹி ஓம் மஹா மந்த்ராய வித்மஹே- வராஹி மனோகராய தீமஹி தன்னோ உன்மத்தபைரவ ப்ரசோதயாத ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே-தண்ட ஹஸ்தாயை தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் 5.அசிதாங்க பைரவர்: (வியாழன்-குருவின் பிராண தேவதை) பிராம்ஹி ஓம் ஞான தேவாய வித்மஹே- வித்யா ராஜாய தீமஹி தன்னோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத் ஓம் ஹம்ஷத் வஜாயை வித்மஹே-கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி தன்னோ பிராம்ஹி ப்ரசோதயாத் 6.ரு...
Comments
Post a Comment