குரு என்பவர் யார் ? உண்மையான குருவின் தன்மைகள் என்ன? `கு` என்றால் இருள். `ரு` என்றால் ஒளி. அறியாமையாகிய இருளை நீக்கி, அகத்தினுள் அன்பு, அருள்,அறிவு ஒளியை ஏற்றி வைப்பவரே குரு. காரணகுரு, காரியகுரு, அசத்குரு, என குருமார்கள் மூன்று வகைப்படுவர். ஒரு கற்பனைக் காட்சியினை மனதினுள் நிறுத்துங்கள். ஒரு கரும்புத் தோட்டத்திற்குள் யானைத் தன் குட்டியுடன் செல்கிறது. அதே போன்று ஒர் ஆடும், ஒரு நரியும் தத்தம் குட்டிகளுடன் நுழைகின்றன. யானை கரும்புகளைச் சுவைத்து அவ்வாறே சுவைக்கக் குட்டிக்கும் கற்றுத் தருகிறது. ஆடு தோட்டத்தில் உள்ள புல்லை மேய்ந்து, குட்டிகளுக்கும் மேயக் கற்றுக் கொடுக்கிறது. நரியோ அங்கு வசிக்கும் உயிரினங்களைக் கொன்று தின்று தன்னைப் போல தின்பதற்கு குட்டிகளுக்கு கற்றுத் தருகிறது. மேலும் படிக்க :http://goo.gl/dYaFFO