இலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு

!!! கும்பாண்டகன் என்னும் அசுரன், இந்திராதி தேவர்களைப் போரிட்டு வென்று தேவலோகத்தைக் கைப்பற்றிக்கொண்டான். இதனால்,இந்திரன் தனது ராஜ்ஜியத்தை இழந்து,காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி என்னும் வனத்திற்கு வந்தடைந்தான். இங்கே சுயம்புநாதராகிய தான் தோன்றி ஈசரைச் சரணடைந்து வணங்கி,வழிபட்டான்.பல ஆண்டுகள் மனமுருகி வழிபட்டதால்,சுயம்புலிங்க மூர்த்தியிலிருந்து பைரவர் வெளிப்பட்டு கும்பாண்டகனை வதம் செய்தார்.வதம் செய்து, இந்திர லோகத்தை மீட்டு இந்திரனுக்குக் கொடுக்கிறார்;பின்னர்,இந்திரனும் இந்திராதி தேவர்களும் வேண்டியதன் பொருட்டு இலுப்பைக்குடியில் தங்கி அருள் பாலித்துவருகிறார். இங்கே பைரவர் தனி சன்னதி கொண்டிருக்கிறார்.இங்கு நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இருபுறமும் நாய் வாகனங்களுடன் உள்ளார் மேலும் படிக்க :http://goo.gl/ioBBzC

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்