ஸ்ரீ ஐயப்பன் ஹரிவராசனம் பாடல் அர்த்தம்!!

ஹரிவராசனம் விஸ்வமோஹனம் ஹரிததீஸ்வர மாராத்ய பாதுகம் அரிவிமர்த்தனம் நித்ய நர்தனம் ஹரி ஹராத்மஜம் தேவமாஸ்ரயே (சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா) மிக சிரேஷ்டமான சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், விஸ்வத்தையே (பிரபஞ்சத்தையே) தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்ற குதிரையில் பவனி வரும் சூர்ய பகவானாலேயே ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நித்யம் ஆனந்த நர்த்தனம் செயபவருமாகிய ஹரிஹரபுத்ர தேவனை சரணடைகிறேன். சரணகீர்த்தனம் சக்த மானஸம் பரணலோலுபம் நர்த்தனாலஸம் அருணபாஸுரம் பூதநாயகம் ஹரிஹராத்மஜம் தேவ மாஸ்ரயே (சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா) சரண கோஷத்தை கேட்பதனால் மிகவும் மன மகிழ்ச்சியடைபவரும், பிரபஞ்சத்தைக் காத்து ரட்சிப்பவரும், நர்த்தனமிடுபவரும், அருணோதயத்தினைப் போல் ஒளிமயமான காந்தியை உடையவரும், பூதநாயகனுமாகிய ஹரி ஹரபுத்ர தேவனைச் சரணடைகிறேன். ப்ரணய ஸத்யகம் ப்ராணநாயகம், ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம் ப்ரணவ மந்திரம் கீர்த்தனப்ப்ரியம் ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே (சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா) பிரியமான சத்யகாவின் கணவரும், தன்னைச் சரணடைந்...