அர்ச்சனை விளக்கம்!!

அர்ச்சனை”என்ற சொல் “அர்ச்சா”என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.அர்ச்சா என்றால் “சிலை”என பொருள்.

இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை,அர்ச்சித்தல், அர்ச்சித்தர் என்ற சொற்கள் வந்தன.அர்ச்சித்தர் என்றாலும் சிலை என்றே பொருள்படும்.அர்ச்சனை செய்வது  இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் வாழ்வில் இன்னும் மேம்பட இறைவனை வேண்டுவதற்காகவும் இருக்கிறது.

சிலர் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு குறிப்பிட்ட நாளில் அர்ச்சனை செய்கிறார்கள்.இது பரிஹாரம் போன்றது.
சஷ்டி அன்றும் பிரதோஷம் அன்றும் இப்படி செய்வதை பார்க்கலாம்.வாழ்வின் குறைகள் தீர இது ஒரு வழி.
ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபசாரங்களுள் “அர்ச்சனையே”முக்கியத்துவம் பெறுகிறது.


ஆறுவகை உபசாரங்கள் இறைவனுக்கு ஆறுவகையான உபசாரங்கள் செய்யப்படுகின்றன:அவை..

1 அபிஷேகம்:
தண்ணீர்,
பால்,
தேன்,
தயிர்,
பன்னீர்,
இளநீர்,
மற்றும் பல பொருட்களால் செய்யப்படுவது.

2 அலங்காரம்:
பட்டு பீதாம்பரத்தாலும்,  பொன்னாலும்,
மலர் மாலைகளாலும்,
தங்க நகைகளாலும்,
வைர வைடூரியங்களாலும் அழகுபடுத்துவதாகும்.

3 அர்ச்சனை:
பூக்களாலும், பாக்களாலும் செய்யப்படுவது.

4 நைவேத்தியம்:
பல்வேறு உணவு வகைகள், பால்,பழம் முதலியவற்றை படைப்பது.

ஆராதனை:
தூபம் காட்டுதல்,தீபம் காட்டுதல்.

உற்சவம்:
பெரு விழா நடத்தி மூர்த்தியை வலமாக வீதிகளில் கொண்டு செல்லுதல்.

நாம் சில வேண்டுதல்களோடு கோயிலிற்கு செல்லும் சமயங்களில் நமது பெயரில் அர்ச்சனை செய்து அவரிடம் மன்றாடி வேண்டிக்கொள்வது தான் முறை.ஆனால் நமது வேண்டுதல்கள் நிறைவேறிய சமயத்தில் கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்து அவருக்கு நன்றி தெரிவிப்பதே சிறந்தது.


Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்