கர்மாவை அழிப்பது எப்படி??

ஒரு நாள் மாலை நேரம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி மலைமீது உலா செல்லும்போது டிஆர்பி எனப்படும் டி.ஆர்.பி ராமச்சந்திர ஜயர் புறப்பட்டார்திடீரென அவருக்கு ஒரு சந்தேகம் தோன்றியது ஸ்ரீ பகவான் இடம் கேட்டார்.

" பகவான் ஒருவர் தனது கர்மாவை பிறப்பினால் ஏற்பட்டிருக்கும். தன்னுடைய விதியை முற்றிலுமாக மாற்றி கொள்ள இயலுமா?". என்றார்

பகவானே நிச்சயமாக 100% மாற்றிக்கொள்ள முடியும்" என்று சொல்லிவிட்டு சற்று நேரம் மௌனமாக நடந்தார்

பின். ஜயரிடம் ". கர்மா. ஒருவரை இரண்டு விதங்களில் பாதிக்கிறது.

 கடந்த கடந்த கால நிகழ்வுகள்.
ஒருவர் செய்த வினைகள் .வெற்றி .தோல்வி. அதற்கான முயற்சிகள். அதனால் அடுத்தவருக்குச் செய்த துன்பம் போன்றவற்றால் வரும் கர்மா ஒருபுறம்

 எதிர்காலத் திட்டங்கள்.
ஆசைகள். லட்சியங்கள் .அதை அடைவதற்காக செய்யும் முயற்சிகள் .அதனால் விளையும் கர்மாக்கள் மறு புறம்.

பிராரப்த கர்மாவை  ஒருவர் முயன்று நிர்மூலம் செய்து விட்டால் 50% கர்மா அழிந்துவிடும் .


பழையது அழிந்தது போல் புதியதும் அழிந்துவிடும் என்று ஒருவர்உறுதி பூண்டால் எஞ்சி இருப்பது நிகழ்காலம் மட்டும் தானே!" என்றார் பகவான்

உடனே ஜயர் "பழைய கர்மாவை அழிப்பது என்பது எப்படி?எனறார்.பகவான்  புன்னகையுடன்' உனக்கு நிகழ்வும் எதுவாக இருந்தாலும் அதை மனதளவில் எந்த எதிர்ப்பும்- எதிர்பார்ப்பும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்.

இருந்தாலும் அது கடவுளின் விருப்பத்தால் மட்டுமே  நிகழ்கிறது என்று மனப்பக்குவத்தோடு இரு. இப்படி இருந்தால் நாளடைவில் மனம் அதற்கு பழகிவிடும் அவ்வளவுதான் அது தானாக நடக்கும்" என்றார் !ஐயரும்உண்மை புரிந்தார் .அகம் தெளிந்தார்.ஓம் சிவ சிவ ஓம்!!


Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்