நமது குழந்தையின் படிப்பில் மந்தத்தன்மை நீங்கிட பைரவர் வழிபாடு :

புதன் கிழமை அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 முதல் 9 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்கு பின்வரும் பொருட்களோடு செல்ல வேண்டும்;
1.மரிக்கொழுந்து மாலை(வேறு எந்த பூவும் இருக்கக் கூடாது)
2.புனுகு
3.பாசிப்பருப்பு கலந்த சாதம்(வீட்டில் சமைத்திருக்க வேண்டும்)
4.பாசிப்பருப்பு கலந்த பாயாசம்
இவைகளில் பூசாரியிடம் மரிக்கொழுந்து மாலையை பைரவருக்கு அணியச் சொல்லி,கொடுக்க வேண்டும்.நாம் கொண்டு வந்திருக்கும் பாத்திரத்தை பைரவரின் சன்னதியில் வைக்க வேண்டும்.(இவைகளில் பாசிப்பருப்பு சாதமும்,பாசிப்பருப்பு பாயாசமும் தனித்தனி பாத்திரங்களில் இருக்க வேண்டும்)நமது (படிப்பு சுமாராக இருக்கும்) குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.பிறகு,அங்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு இந்த சாதத்தையும்,பாயாசத்தையும் பாதி விநியோகிக்க வேண்டும்;மீதியை நமது வீட்டுக்கு எடுத்துச் சென்று,நமது குழந்தைக்குத் தர வேண்டும்.நாமும் சாப்பிடலாம்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்