திருஷ்டியால் வரும் தோஷங்கள்...
1. திருஷ்டி என்பது ஒருவருடைய வசதிகள், சொத்து, திறமை, இன்பம் குறித்து, மற்றவர்கள் பேராசைக் கண்களுடன் காணுதல்.
2. தனக்கு நிறைவேறாத ஆசைகள் பிறர்க்கு நிறைவேறுவதைக் கண்டு பொறாமையுறுதல்
3. தனக்கு எவ்விதத் தகுதியுமில்லாது, பிறர் அனுபவிப்பதைக் கண்டு மனதில் புழுங்குதல்
4. நல்ல எண்ணங்களே ஏற்படாது எப்போதும் பிறரை வசைபாடுதல், பிறர் மீது எப்போதும் சினத்தோடும், கெடுதல் விளைவிக்கும் எண்ணங்களோடும்
- இவ்வாறாக திருஷ்டியிலும் பலவகைகள் உண்டு. திருஷ்டி என்பது உண்மையே, அவை பகைமை எண்ணங்களுக்குரிய விளைவுகளை அதாவது ஆரோக்கியத்தைக் கெடுக்கும். வியாபார முன்னேற்றத்தைத் தடுக்கும். வெறும் கண் திருஷ்டிக்கே இவ்வளவு எதிர்விளைவுகளென்றால், நாம் வாழ்க்கையில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொரு எண்ணத்திற்கும் சக்தி உண்டு. நல்லதோ, தீயதோ, சமநிலையுடையதோ, உபயோகமற்றதோ எத்தகைய எண்ணத்திற்கும், விதவிதமான சக்திகளுண்டு நம்முடைய பெரும்பாலான புண்ணிய சக்தி கழிவது நம் எண்ணங்களினால் தான். எத்தகைய எண்ணமும் இல்லாது, வெறும் மனதோடு அதாவது. வள்ளலார் சுட்டிக் காட்டிய 'சும்மா இருப்பதே சுகம்'' என்று மனிதனால் இருக்கமுடியுமா! மனிதன் மனதை சத்விஷயங்களில் செலுத்தினாலே போதும், அவன் மகான்கள் கூறிய 'சும்மா இரு' நிலையை அடைந்ததற்கு ஈடாகிவிடும். 
நம்முடைய அன்றாட வளர்ச்சியைப் பற்றி, பிறருடைய பொறாமைக் கண்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு பலவிதமான எளிய வழிமுறைகளைச் சித்புருஷர்கள் அளித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை நம் முதியோர்கள் கடைப் பிடித்ததேயாகும்.
கண் திருஷ்டியால் ஏற்படும் தீய சக்திகள் நம் இல்லத்தில் சுவர், கதவு போன்ற திடப்பொருட்கள், இல்லத்தினுள் உள்ள வாயு மண்டலம் புழைய பொருட்கள் போன்றவற்றில் எளிதில் படிவதால், வீட்டில் அடிக்கடி சாம்பிராணி தூபம் இட்டு வரவேண்டும். இந்த குங்கலிய தூபத்திற்கு, எத்தகைய கடும் தோஷங்களையும் நீக்கும் தெய்வீக சக்தியுண்டு. 



இல்லத்தில் ஏற்படுகின்ற திருஷ்டிகளை நீக்குவதற்கு மிக எளிமையான வகையில் ''பஞ்ச திரவிய திருஷ்டி பரிகார முறை'' அகஸ்தியரால் அளிக்கப்பட்டுள்ளது. வியாபாரத்தில் பிறருடைய கண் படுதல், இல்லத்தில் குழந்தைகள் நோய்வாய்ப் படுதல், படிப்பில் மந்தமாக இருத்தல், புது நகைகளை, ஆடைகளை அணியாதவாறு பல தொந்தரவுகள் ஏற்படுதல் போன்றவற்றிற்கு திருஷ்டி பரிகாரமாக இம்முறை அமைகிறது. மேலும் பொதுவாக அனைத்து விதமான திருஷ்டிகளைக் களைவதற்கும் இம்முறையை கடைப் பிடிப்பது நலம்.
பஞ்ச திரவிய திருஷ்டி பரிகாரம்
பசுஞ்சானத்தில் மட்டும் செய்யப்பட்ட ஒரு விரட்டியை எடுத்து அதில் கற்பூரமோ, தேங்காய் நாரோ, குச்சிகளையோ, அடுப்புக்கரியோ வைத்து அக்னியை எழுப்ப வேண்டும். மண்ணெண்ணெய் கொண்டு ஒருபோதும் நெருப்பைப் பற்ற வைக்கக் கூடாது. இதனால் சாபங்களே ஏற்படும். 
காய்ந்த சிவப்பு நிற மிளகாய், உப்பு. மிளகு, வீதியில் நம் கால் பட்ட மண்ணில் சிறிது, வீட்டில் பெருக்கிய குப்பையில் உள்ள மண் ஆகிய ஐந்தையும் வலது உள்ளங் கையில் வைத்துக் கொண்டு, கணவன் மனைவி, பிள்ளைகளை அமர வைத்து, வயதில் மூத்தவர் (பெரியோர்) வலது கையினால், வலது பக்கம் மூன்று முறையும், இடது பக்கம் மூன்று முறையும் சுற்ற வேண்டும். பிறகு கையில் உள்ள 5 திரவியங்களையும், நெருப்பு எழுப்பப்பட்டுள்ள பசு விரட்டியின்மேல் போட்டு விட வேண்டும். இப்போது படபட வென்று வெடிக்கும் சப்தம் கேட்கும். இதுவே 'திருஷ்டி வெடிப்புச் சுழல் ஆகும். பிறகு அந்த விரட்டியை, நெருப்புடன், முச்சந்தியிலோ, நாற்சந்தியிலோ போட்டு விடவேண்டும். ஒரு போதும் வீதியின் நடுவில் இதனைப் போட்டு மற்றவர்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கக் கூடாது.
இந்த பஞ்ச திரவிய திருஷ்டி பரிகார முறையில் பல ஆன்மீக இரகசியங்கள் பொதிந்துள்ளன. மிளகாயில் உள்ள காரம் அக்னியில் சேரும்போது தீவினைகளைப் பொசுக்கும் சக்தி அதற்கு ஏற்படுகின்றது. மிளகின் ஆன்மீக சக்திகளைப் பற்றி நாம் ஏற்கனவே விளக்கியுள்ளபோதிலும் மிளகிற்குத் தீவினைகளை தன்னுள் கிரஹித்து, உறிஞ்சும் தன்மை உண்டு என்பதை இங்கு நாம் அறியவேண்டும்.
பொதுவாக நம்முடைய வாழ்க்கை வசதிகளைக் குறித்தும், முன்னேற்றங்களைப் பற்றியும் பொறாமை கொள்வோர், குரோதம், பகைமை போன்ற உணர்ச்சிகளை உடையோர் நம் இல்லத்திற்கு வந்து சேர்ந்தவுடன் ஊதுபத்தி அல்லது சாம்பிராணி தூபத்தை ஏற்றி, அவர்கள் விட்டுச் செல்கின்ற எதிர் வினை சக்திகளையும், தீவினைப் படிமங்களையும் உடனடியாக அகற்றி விட வேண்டும். இது கருதியே, இல்லத்தில், பெருக்கிய மண்ணின் ஒரு பகுதியும், வீதி மண்ணும் அக்னியில் சேர்க்கப்படுகின்றன.
கண்திருஷ்டிக்கு ஊமத்தைபரிகாரம்
ஊமத்தங்காய், இரண்டு மிளகாய் (குறுக்கே பெருக்கல் குறிபோல் வைத்து), எலுமிச்சை, படிகாரம். இதே வரிசையில் ஒரு நூலில், கீழிருந்து மேலாக வைத்துக் கட்டி, யாருக்கு திருஷ்டி கழிக்க வேண்டுமோ, அவர்களை அமர வைத்துச் சுற்றி தூர எறிந்திட வேண்டும். இது மிகச் சிறந்த திருஷ்டிப் பரிகாரம் ஆகும்.
இதனையே இல்லத்தின் முன், தலைவாசல் நிலைப்படிக்கு மேல்புறத்தில் கட்டுவதால், கண்திருஷ்டியாலான எதிர்வினைகள் வடிகட்டப்படுகின்றன.
முறைகோட்டு உத்திரை சங்கு என்ற ஒருவிதச் சங்கு உண்டு. பொதுவாக இதனை 'உத்தர சங்கு" அல்லது 'உத்திரை சங்கு" என்றழைப்பார்கள். கறுஞ்சனல் கயிற்றினை இந்த உத்திரை சங்கிற்குள் நுழைத்துச் செவ்வாய் கிழமை அன்று காலையில் 6 மணி முதல் 7 மணிக்குள் வீட்டு வாயிலில் கட்டி விட வேண்டும். நன்றாகப் பாடுதல், இசைக் கருவிகள் இசைத்தல், சொற்பொழிவு போன்றவற்றில் திறமை கொண்டவர்கள் கண் திருஷ்டியால் பாதிக்கப்படும்போதும், பால் அருந்தாது குழந்தை அழுது கொண்டே இருக்கும் போதும் இவ்வித பரிகர முறையால் திருஷ்டி கழிக்கப் பட்டு, அனைத்தும் நல்ல விதமாக நடக்கும்.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006,
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்