
# vijaaiswamiji # bairavafoundation # bairavapeedam # sivarathiri # சிவராத்திரி தலைச்சிறந்த சிவராத்திரி… எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர் - என்று சிவபெருமான் சொன்னதாக சிவராத்திரி புராணத்தைக் கூறும் வரத பண்டிதம் தெரிவிக்கிறது. எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் ஆனாலும் சரி, அன்பு உள்ளவர்கள் ஆனாலும் சரி. சிவராத்திரி அன்று சிவபெருமானை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள். சிவராத்திரி என்றால், நமக்குத் தெரிந்தது ஒரு சிவராத்திரிதான். ஆனால், மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என சிவராத்திரி ஐந்து வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மாக சிவராத்திரி: மாக சிவராத்திரியே ‘மகா சிவராத்திரி’ என அழைக்கப்படுகிறது. மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு ‘வருஷ சிவராத்திரி’ என்ற பெயரும் உண்டு. யோக சிவராத்திரி: யோக சிவராத்திரியில் நான்கு...