பலன் தரும் சிவ வழிபாடு
சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலையில், அவருக்கு நிழல் தருவது உத்தால மரம். இந்த மரத்தை பூலோகத்தில் தென் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் தரிசிக்க முடியும். அந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில் உள்ள உத்தவேதீஸ்வரர் ஆலயம். 

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த இடம் தஞ்சாவூர் அருகே உள்ள திருமணஞ்சேரி திருத்தலம். அந்த திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இடமாக, குத்தாலம் திருத்தலம் சொல்லப்படுகிறது. அந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு உத்தால மரம் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. 
இந்த ஆலயத்தில் உள்ள சனீஸ்வர பகவான், கல்யாண சனீஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனை வழிபாடு செய்தால் கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
வியாபாரத்தில் லாபம், நஷ்டம் ஏற்படுவது சகஜம் தான் என்றாலும் சிலருக்கு மட்டும் லாபமாக தொழில் அமைகிறது. பலருக்கு நஷ்டத்தால் மனவருத்தம் உண்டாவதோடு கடன் தொல்லைக்கும் ஆளாகின்றனர். இதில் இருந்து மீள எளிய பரிகாரங்கள் உள்ளன. இதனைத் தொடர்ந்து செய்ய லாபம் படிப்படியாக உயரும்.
லட்சுமி குபேரருக்கு நவநிதிகளை வழங்கியவர் சிவபெருமான். அவருக்குரிய திங்கட்கிழமை (அ) பிரதோஷத்தன்று விரதமிருந்து வில்வ அர்ச்சனை செய்தால் லாபம், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். 
கார்த்திகை மாதம் திங்கட்கிழமையில் செய்வது சிறப்பு. லட்சுமியின் அம்சமாகத் திகழும் பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுத்தாலும் லாபத்தோடு, முன்னோர் ஆசியும் கிடைக்கும்.



விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006,
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்