வாழ்கை பசுமையாகட்டும் ! வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் !!
கால் பெருவிரல் ரேகை
ஜோதிடம்-ஒரு தொகுப்பில்
ஜோதிடம்-ஒரு தொகுப்பில்
இன்று....
மனிதர்கள் ஒவ்வொருவரும் அன்றாடம் நிமிடத்திற்கு நிமிடம் நினைப்பது, அவரும், அவர் சார்ந்தக் குடும்பமும் எவ்விதக் குறைபாடுகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.தாங்கள் ஆண்டுக்கு ஆண்டு வாழ்க்கையில் வளம் பல பெற்று உயர்வான நிலையை அடைய வேண்டும் என்பதே. அதற்கு அடுத்தபடியாகத்தான் தனது சுற்றம் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பது. அவ்வாறான மனிதனின் வாழ்க்கை உயர்வுக்கு ஒவ்வொருவரும் ஏதாவது துறையைத் தேர்ந்தெடுத்து தன் உழைப்பைக் கொடுத்து வியர்வையைக் சிந்தி பாடுபட்டு எவ்விதப் பலனும் இல்லாமல் ஓய்ந்து போன நிலைகள் மனித வாழ்வில் ஏராளம். காரணம், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உடலமைப்பு, உடலுழைப்பு, சிந்திக்கும் திறன் அதற்க்கேற்றார் போல் செயல்படும் திறன் இவைகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர் எவரும் வாழ்க்கையில் முன்னேறியதாக வரலாறு இல்லை.
மேற்கண்டவைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து செயல்பாட்டிற்கு வருவதற்கு ஆண்டவனின் அருட்பார்வை கட்டாயம் நமக்குக் கிடைத்தாக வேண்டும். அது கிடைக்காத வரை நம்மால் எதையும் செய்யமுடியாது. காரணம், நாம் அறிவுபூர்வமாகச் சிந்தித்து பெரிய அளவிலான, மக்கள் பயன் பெறுகின்ற திட்டங்கள் தீட்டி அதைச் செயல்படுத்த வேண்டுமானால் "மூலதனம்" எப்படி முக்கியமானதோ, அதைப்போன்று தெய்வ கடாட்சம் மிக மிக முக்கியமானது.
அவ்வாறான ஆண்டவனின் அருட்பார்வை கிடைத்து விட்டால் வாழ்க்கை உயர்வடையும்.அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கும். நாம் அனைவருமே தொழில் தொடங்கும் முன் பூஜை செய்து ஆரம்பிக்கின்றோம். பூஜை செய்து கடவுளை வழிபட்டு தொழில் தொடங்கியோரில் ஒருசிலர் மட்டும் மேன்மை அடைவதும், ஒருசிலர் நஷ்டத்தை அடைந்து, பிறகு அவர்கள் செய்த தொழிலையே விட்டுவிடுவதற்குக் காரணங்கள் என்ன? அதே போல் புதிதாய் வீடு கட்டி தகுந்த முறையில் கிரஹப்பிரவேசம் செய்து குடிபுகுந்த பின் அவ்வீட்டில் வறுமை, நோய், விபத்துக்கள், குழந்தைபாக்கியமில்லாதது மற்றும் கணவன், மனைவி கருத்து ஒற்றுமை இல்லாமல் விவாகரத்துப் பெறுவது அல்லது கட்டிய வீட்டையே விற்கின்ற நிலை போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கான காரணங்கள் என்ன? இவற்றுக்கு நாம் விடை காண வேண்டாமா?
இந்து மதத்தவர்கள் அம்மததிலுள்ள அனைத்து கடவுள்களைக் கும்பிட்டாலும், ஒவ்வொருவரும் தங்களுக்குள் பிடித்தமான ஒரு தெய்வத்தை மட்டும் மிகவும் பிரியமாக பெயர், இராசி, நட்சத்திரங்களின் பேரில் அடிக்கடி அர்ச்சனை செய்து அதன்பின் அனைத்து நற்பலன்களும் இனிக் கிடைத்துவிடும், கஷ்டங்கள் தீர்ந்து விடும் என்று எண்ணி நம்பிக்கையுடன் செல்வார்கள். இவ்வாறு செய்வதால் பலன் ஏதும் கிடைக்காது. அவ்வாறு செய்யாமல் தங்கள் உடல் அம்சம் சார்ந்த, தங்களுக்கு ஏற்ற, தங்களுக்கு அருளையும் பொன் பொருளையும் அள்ளித்தருகின்ற கடவுளைக் தெரிந்து கொண்டு, அதனை எந்த நேரத்தில், என்னென்ன பூஜைப்பொருட்களை வைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்ற விபரங்களையும் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு மனிதனின் விதி,அவன் உடல் சார்ந்த தெய்வம், எந்தத் தொழிலை அவர் செய்தால் மேன்மையடையலாம், அதன் மூலம் அவருடைய வாழ்க்கை முன்னேற்றம் பற்றிய பலன்கள் அனைத்தும் அவருடைய கால் பெருவிரல் ரேகையில் மட்டுமே உள்ளது. இது பல்வேறு மனிதனின் கால் பெருவிரல் ரேகைகளைப் பதிவு செய்து ஆராய்ச்சியில் கண்டறிந்த உண்மை.
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்துக்களைப் போல் பல கடவுள்களை வணங்காவிட்டாலும் கூட, கிறிஸ்தவர்கள் சர்ச்சுகளில் தங்கள் பிராத்தனைநேரம் தவிர, இஸ்லாமியர்கள் மசூதிகளிலும், தர்ஹாக்களிலும் தொழுகை நடத்திய நேரம் தவிர, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் வீட்டிலோ, அல்லது தொழில் செய்யும் இடங்களிலோ தங்கள் இறைவனை சிறிது நேரம் நின்றபடியோ அல்லது உட்கார்ந்த நிலையிலோ கொஞ்சநேரம் நினைத்துப் பார்த்தாலே போதும்.
அவர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அப்படியில்லாமல் அனைவரும் ஏதாவது ஒரு சில நேரங்களில் கிறிஸ்தவர்கள் "இயேசுவே" என்றும், இஸ்லாமியர்கள் " யா அல்லா" என்றும் கூறிக்கொண்டிருப்பார்கள் அதில் பலன் கிடைக்காது அதை விட்டு விட்டு ஒவ்வொருவருக்கும் உரிய நேரம் எது என்பதையும் கூட கால் பெருவிரல் ரேகைக் கணிப்பில் கண்டுபிடித்து அதன்படி வணங்கினால்தான் பலனுண்டு, அருளும் கிடைக்கும்.
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்துக்களைப் போல் பல கடவுள்களை வணங்காவிட்டாலும் கூட, கிறிஸ்தவர்கள் சர்ச்சுகளில் தங்கள் பிராத்தனைநேரம் தவிர, இஸ்லாமியர்கள் மசூதிகளிலும், தர்ஹாக்களிலும் தொழுகை நடத்திய நேரம் தவிர, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் வீட்டிலோ, அல்லது தொழில் செய்யும் இடங்களிலோ தங்கள் இறைவனை சிறிது நேரம் நின்றபடியோ அல்லது உட்கார்ந்த நிலையிலோ கொஞ்சநேரம் நினைத்துப் பார்த்தாலே போதும்.
அவர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அப்படியில்லாமல் அனைவரும் ஏதாவது ஒரு சில நேரங்களில் கிறிஸ்தவர்கள் "இயேசுவே" என்றும், இஸ்லாமியர்கள் " யா அல்லா" என்றும் கூறிக்கொண்டிருப்பார்கள் அதில் பலன் கிடைக்காது அதை விட்டு விட்டு ஒவ்வொருவருக்கும் உரிய நேரம் எது என்பதையும் கூட கால் பெருவிரல் ரேகைக் கணிப்பில் கண்டுபிடித்து அதன்படி வணங்கினால்தான் பலனுண்டு, அருளும் கிடைக்கும்.
கால் பெருவிரல் ரேகைகளில் வில்வக்கோடுகள், வாகைக்கோடுகள், நாகக்கோடுகள், சங்குக்கோடுகள், சுரியக்கோடுகள், வருணக்கோடுகள், சக்கரக்கோடுகள், கத்தரிக்கோடுகள், கூர்மக்கோடுகள், அந்திமக்கோடுகள், சந்திரக்கோடுகள், குழிமுகம், கருடமுகம், கோமுகம் என இன்னும் பல்வேறு கோடுகள் பல்வேறு மனிதர்களின் கால் பெருவிரல் ரேகைகளில் மாறி, மாறி அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் கூட ஒரே மனிதரின் கால் பெருவிரல் ரேகையில் அமைந்திருக்கும் வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையை உன்னத நிலைக்கு கொண்டு செல்லும்.
உதாரணமாக ஒருவருடைய கால் பெருவிரல் ரேகையில் வருணக் கோடுகள் அமைந்திருக்குமானால் அவர் அதிகமாக யாருடனும் தொடர்பு கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார். சதா காலமும் தன் குடும்பம் பற்றியே சிந்திப்பவர். அந்தக் கோடுகளுடன் சுரியக்கோடுகளும் அவருக்கு அமைந்து இருந்தால் அவர் எப்போதும் பணத்தில் புரளும் நிலை நாளடைவில் உருவாகும். இதுவும் ஆராய்ச்சியின் மூலம் கண்ட உண்மை. வாகைக்கோடுகள் அமையப்பெற்றவர், எல்லோருக்கும் வளைந்து கொடுப்பவர், மரியாதை மிக்கவர். ஒரு குறிக்கோளை மனதில் இரகசியமாக வைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறத்துடிப்பவர். அவர் எடுக்கும் முயற்சிகளில் சிறு மாற்றம் செய்தால் வளமான வாழ்க்கையைப் பெறுவது நிச்சயம். அவர் செய்ய வேண்டிய மாற்றம் அவருடைய கால் பெருவிரல் ரேகைகளின் மூலம் கண்டறிய முடியும்.
கால் பெருவிரல் ரேகையில் குழிமுகம் இருந்தால் அவருடைய வாழ்க்கை சரிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும். அவரது கால் பெருவிரல் ரேகையின் மூலம் அவர் எந்தத் தெய்வத்தினை எந்தெந்தப் பூஜைப்பொருட்கள் மற்றும் மலர்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் கண்டறிந்து அதன்படி அவருக்கு உரிய நேரத்தில் பக்தி சிரத்தையுடன் மூன்று பௌர்ணமி நாட்களில் கும்பிட்டு வந்தால் அவருடைய வாழ்க்கை ஒளிமமாகும்.
கலை உலகம் என்கின்ற நடன, நாட்டியம், சங்கீதம், சினிமா சார்ந்த துறைகளில் உள்ளோர்களுக்கு பெண்களாக இருந்தால், கால் பெருவிரல் ரேகை கலச முகம் பெற்று வில்வக்கோடுகள் அல்லது சுரியக்கோடுகள் பெற்றிருந்தால் புகழுச்சிக்குச் செல்வர். ஆண்களாக இருந்தால், கால் பெருவிரல் ரேகை கோமுகம் பெற்று சந்திரக்கோடுகள்அமைந்திருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் செல்வச்செழிப்புடன் பெரும் புகழ் பெறுவர்.
ஒருவரின் கால் பெருவிரல் ரேகையில் சந்திரக்கோடுகள் இருந்தால், அவர் நல்ல அறிவாளியாக இருப்பார். அந்தக் கோடுகளுடன் சக்கரக்கோடுகள் இருந்தால் அவர்கள் செல்வச்செழிப்புடன் வாழ்வர்.
கால் பெருவிரலில் உள்ள ஒரு சில கோடுகளும், ஒரு சில முகங்களும் ஒரு சிலருடைய நட்சத்திரங்களுக்கும், இராசிகளுக்கும், நன்மையையும், தீமைகளையும் கொடுக்ககூடியது.
உதாரணமாக எடுத்துக் கொண்டால் "பரணி" நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என ஆருடம் சொல்வார்கள். நாட்டில் "பரணி" நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல லட்சம் பேர் இருந்தும் "தரணி" ஆள முடியவில்லை, அதற்கான காரணம் என்ன? அவர்களுடைய கால் பெருவிரல் ரேகையில் கஜமுகமும், வாகைக் கோடுகளும்,அமையாமல் இருப்பது தான் முதற்காரணம்.
ஆக "பரணி" "மகம்" நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய கால் பெருவிரல் ரேகை அமைப்பில் "கஜமுகமும்" "வாகைக்கோடுகளும்" அமைந்திருந்தால் ஒருநாட்டையே (தரணியை) ஆளும் தகுதி அவர்களுக்குத் தானாகவே வந்து சேரும்.
ஆக "பரணி" "மகம்" நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய கால் பெருவிரல் ரேகை அமைப்பில் "கஜமுகமும்" "வாகைக்கோடுகளும்" அமைந்திருந்தால் ஒருநாட்டையே (தரணியை) ஆளும் தகுதி அவர்களுக்குத் தானாகவே வந்து சேரும்.
தொடரும்.......
செல் :+91 9443351497 , 9842499006,
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org
Comments
Post a Comment