ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! உண்மையை மறக்காமல் எப்போதும் பொய்யை விலக்கி விட்டு வாழுங்கள். உண்மையையே பேசுங்கள். பிறருக்கு இதமானவற்றைச் செய்யுங்கள். இவ்வகையில் உண்மையை உரைத்தல் எப்போதும் கடினம் தான். உணவு வகைகளை மிதமிஞ்சி உண்ணும் பழக்கம்கூடாது. அது மிகமிகத் தீமையைப் பயக்கும். உணவுப்பொருள்களை தேவையோடு அளவாகத் தான் எடுத்துக் கொள்வது நல்லது. ஊமையை ஊமை என்று சொல்வதும், நோயுற்றவனை நோயாளி என்றும் சொல்வது உண்மையாயினும் இவ்வாறெல்லாம் சொல்லுதல் சரியன்று. ஏனென்றால் இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மனம் நோகும். தானம் நான்கு வகையாகும். அவை, உணவு, மருந்து,சாஸ்திரம், அபயம் என்பனவாகும். இந்த நான்கு வகை தானங்களும் அவசியம் செய்ய வேண்டியவை ஆகும்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்