மகாளய அமாவாசை !!

பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம், வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என்றெல்லாம் கணக்கிட்டு ஒன்றுடன் ஒன்று சேரும்போதும், தனித்தனியே சில மாதங்களில் வரும்போதும் முக்கிய விரதங்களையும், வழிபாடுகளையும் தொன்று தொட்டு நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்து காட்டி வந்துள்ளனர். ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை’ ஆகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும்போது புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதத்தை ஆன்மிக மாதம் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு விரதங்களும், வழிபாடுகளும், விழாக்களும், பண்டிகைகளும் இம்மாதத்தில் அதிகம். இந்த மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்தவையாக கொண்டாடப்படுகின்றன. திதிகளில் மிகவும் சிறப்பு பெற்றது, மகத்துவங்கள் கொண்டது அமாவாசை திதி. எல்லா மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக இருந்தாலும், புரட்டாசி ...