சபரிமலைக்கு மாலையணியும் போது கறுப்பு நிற ஆடை அணிவதும், ருத்ராட்ச மாலையிட்டுக் கொள்வதும் ஏன்?

சபரிமலைக்கு மாலை அணிகின்றவர்கள் கறுப்பு நிற ஆடை அணிவதும், ருத்ராட்ச மாலையிட்டுக் கொள்வதும் ஏன் என்பதற்கு காரணம் உண்டு.

ஆச்சாரங்கள் எப்போதும் விஞ்ஞானத்துடன் பின்னி பிணைந்திருப்பவை. அதனை அனுசரித்து செயல்பட்டால் மட்டுமே பலனும் கிடைக்கும். சபரிமலைக்கு செல்லும்போது சில பிரதான ஆசாரங்களை கடைபிடித்தல் அவசியம்.

அது இல்லாமல் போனால் சாதாரண மலையேறுவது போன்றாகிவிடும். கறுப்பு ஆடை அணிந்து ஐயப்ப மந்திரங்களை உச்சரித்தால் உடன் பலன் உண்டாகும்.

மனிதருள் எதிரெதிரான சக்திகள் உள்ளன. இதனை தேவ, அசுர குணங்கள் என்று கூறுவர். மனிதரில் ஒரு வகை எதிர்மறையான சிந்தனைகள் மாறி மனசாந்தியும், சமாதானமும் கிடைக்க தியானம் நல்லதாகும். தியானித்தின் போது கறுப்பு ஆடை அணிவதும், ருத்ராட்ச மாலை அணிவதும் தியானத்தின் சக்தியை அதிகரிக்க செய்யும். ருத்ராட்ச மாலை அணியும்போது 108, 64, 54, 48 என்ற அடிப்படையில் அதன் எண்ணிக்கை இருத்தல் வேண்டும்.

ருத்ராட்ச மாலை அணியும் முன்னர் சிவன் கோயிலிலோ, ஐயப்பன் கோயிலிலோ பூஜித்து அணிய வேண்டும்.











Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்