சந்திராஷ்டமம் பற்றிய முக்கிய விளக்கம் :

சந்திராஷ்டம தினம் என்பது ஜோதிட வானியல் கலையின் படி சந்திரன் மனத்தைக் கட்டுப்படுத்தி அறிவுத்திறனை நிர்ணயிக்கும் கிரகம் சந்திரன்.
எப்பொழுதெல்லாம் அவர் குறிப்பிட்ட ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சரிக்கிறாரோ அப்பொழுதெல்லாம் ஜாதகருக்கு அறிவுத்திறனும் மனோ பலமும் குறையும் என மிகப் பழமையான ஜோதிட நூல்களில் விளக்கப்பட்டுள்ளன.
ஆகவே சந்திராஷ்டம தினங்களில் அறிவுத்திறன் குறைவதால் அத்தகை நேரங்களில் முக்கிய விஷயங்களில் நாம் தவறான முடிவு எடுப்பதற்கு சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன.
எனவே முக்கியமான முடிவுகளையும் ஆலோசனைகளையும் சந்திராஷ்டம தினங்களில் சம்மந்தப்பட்;ட இராசியினர் தவிர்ப்பது அவசியம்.
இதற்கு எவரும் விதிவிலக்கல்ல மேலும் சந்திராஷ்டம தினத்திற்கு முந்திய நாளும் பிந்திய நாளும் சேர்த்து ஆக மொத்தம் மூன்று நாட்கள் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்யக் கூடாது. சந்திராஷ்டமம் உள்ள நட்சத்திரதாரர் சுபகாரியங்களை தவிர்த்தல் நல்லது.

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்