அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்?

கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர்.
இதற்கு ஒரு தத்துவப்பின்னணி உண்டு. உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான்.
அவனுடைய அறுபதாம் வயது வாழ்வின் திருப்புமுனையாக அமைகிறது.
இளமையில் செய்த திருமணத்தின் அடிப்படையில் குடும்பத்தைப் பேணுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல் போன்ற இல்லறக்கடமைகள் நிறைவேறுகின்றன.
அதன்பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுத்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும்.
இந்த ஆன்மிகக் கடமையை நினைவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்