சிவ விரதங்களில் விசேஷமானது பிரதோஷ விரதம் :

சிவபெருமானை நினைத்து அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் மிக விசேடமானது பிரதோஷ விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறைக் காலங்களில் திரயோதசி திதியில் வருவது பிரதோஷ காலமாகும்.
இதிலும் மாலை 4.30 இலிருந்து 6 மணி முதல் பிரதோஷ காலமாக கருதப்படுகிறது. இதனால் இதனை சத்தியாகாலம் என்றும் அழைப்பார்கள்.
இந்நிலையில் இந்த நேரப்பகுதியில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம் ஆகும். பிரதோஷ விரதத்தை அனுஷ்டிப்பதால், முற்பிறவிக் குற்றங்கள் மற்றும் சகல தோஷங்கள் நீங்குவதோடு பாவம் விலகி புண்ணியம் சேர்கிறது.
அத்துடன் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் சக்தி இந்த விரதத்திற்கு உண்டு. மேலும் பிரதோஷ விரதத்தை அனுஷ்டிக்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வரும் சனிக்கிழமை பிரதோஷ நாளன்று இந்த விரதத்தை கடைப்பிடிப்பது சிறந்தது.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்