குத்து விளக்கில் எத்தனை திரிகள் பற்றவைக்க வேண்டும்?

குத்து விளக்கில் இரண்டு அல்லது ஐந்து திரிகள் பற்றவைக்க வேண்டும் என சம்பிரதாயங்கள் குறிப்பிடுகின்றன. ஒற்றைத் திரியானது நோயின் அடையாளம் எனவும், மூன்று திரியில் விளக்கேற்றினால் அது அலட்சியத்தின் இலட்சணம் எனவும், நான்கு திரிகள் ஏற்றினால் அது தரித்திரம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

ஒன்று, மூன்று அல்லது நான்கு திரிகளை ஏற்றும் போது எதிர்மறை சக்தி பரவுவதாக நம்பப்படுவதுடன், இரண்டு அல்லது ஐந்து திரிகளை ஏற்றும் போது சாதகமான சக்தி பரவும் எனவும் நம்பப்படுகின்றது.

இதேவேளை, மாலை நேரத்தில் விளக்கேற்றுவது மிக அவசியம் என்பதுடன், குத்துவிளக்கை ஏற்றுவதற்கு எள்ளெண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது எனவும் இந்து மத நம்பிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்