ஹனுமனுக்கு வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதன் தார்ப்பரியம் :

ஹனுமனுக்கு வாலில்தான் அதிக சக்தியுண்டு. அதன் காரணமாகவே ஹனுமனுக்கு வாலில் குங்குமம் வைத்து வழிபடுகின்றனர்.

பக்தி சிரத்தையுடன் இராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் இடத்திலிருந்து தினமும் சந்தனம் சாத்தி, குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு முடிவடையும் சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பில்லாமல் உணவு படைக்க வேண்டும். தாம் நினைத்த காரியம் நிறைவேறும்வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.

அத்துடன், ஆஞ்சநேயரை இராம நாமத்தால் அர்ச்சித்து, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.

இராமரின் தூதனாக ஹனுமன் சித்தரிக்கப்பட்டாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். இவரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட பலன் கிடைக்குமென்பது ஐதீகம்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்