குருவருள் அருளும் ஆலங்குடி நவக்கிரகங்களில் முழு முதற் சுப கிரகமான " குரு பகவான் " பொன்னிறமானவர். சாத்வீக குணம் கொண்டவர். தேவர்களுக்கெல்லாம் இவரே குரு. கைகளில் யோக தண்டம், வர மித்திரை, அட்சய கமண்டலம் கொண்டு குபேர திசை நோக்கி யோகத்தில் அமர்ந ்துள்ளவர். இவர் புத்திர காரகன். பொருள் காரகன். ஆலயங்கள், போதனைச் சாலைகள், உபன்யாசம், புனித இடங்கள், ஆன்மீகத் தொடர்பு போன்றவற்றில் வாசம் செய்பவர். தெய்வ பக்தி, ஆசாரம், புத்தி, யுக்தி, ஞானம், பொறுமை, புகழ் ஆகியவற்றிற்கு இவரே காரகன். ஜாதகத்தில் குரு பார்வை கொண்டே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. சூரியனை அடுத்த மிகப் பிரகாசமான கிரகம் குரு.