சனி பகவானின் புண்ணிய பரிகாரம்

சனி பகவானின் புண்ணிய பரிகாரம் ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது – அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் – சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி – கொடுமையாக தண்டிக்கிறார்.கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் – யாரும் சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங் கிறதுக்காக ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம். பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். மேலும் படிக்க http://goo.gl/cu3c0V

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்