பூரண கும்பம் .....................
உலகில் உள்ள தாவர சங்கமங்களும் சகல ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன; பிரளய காலத்தில் நீரிலேயே "லயம்' ஆகிவிடுகின் றன. ஆதலால் இறைவனை நீரின்மூலம் உருவ வழிபாட்டிற்கு கொண்டுவருவதே பூரண கும்பத்தின் தத்துவம்.
கும்பம் (குடம்)- உடல்.
குடத்தில் உள்ள நீர்- ரத்தம்.
உள்ளே போடப்படும் ரத்தினங்கள்- சுக்கிலம்.
கூர்ச்சம்- நாடி.
குடத்தின் மேலே சுற்றப்பட்ட நூல்- நரம்புகள்.
குடத்தின் மேலே போடப்பட்ட துணி (வஸ்திரம்)- தோல்.
மந்திரங்கள்- உயிர்.
குடத்தின் மேலுள்ள தேங்காய்- சிரசு, முகம்.
லம்பகூர்ச்சம்- சிகை (முடி).
மாவிலைகள்- ஜடாபாரங்கள்.
"இப்படி மந்திரங்களின் உதவியுடன் அலங்கரிக்கப்பட்ட குடத்தில், சிவனை எழுந்தருளச் செய்கிறோம்' என்று சிவ ஆகமத்தில் சொல்லப் படுகிறது. எனவே பூரண கும்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் இறைவனாக பாவித்து வணங்க வேண்டும். பொருளறிந்து செய்யப்படும் பூசைகள் மூலம் நாள் முழுவதும் இறை உணர்வில் இருக்கமுடியும்.
http://www.bairavafoundation.org/
ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :
நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம் தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம் பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் காமனை எரித்த பேரருள் லிங்கம் ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம் வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம் சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம் தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம் கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம் தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம் பங்கய மலர்களை சூடிடும் லிங்கம் வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் அமர கணங்கள் போற்றிடும் லிங்கம் அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம் கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம் எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம் அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம் நிரந்தரம் வானத்து மலர்...
Comments
Post a Comment