பூரண கும்பம் .....................

பூரண கும்பம் ..................... உலகில் உள்ள தாவர சங்கமங்களும் சகல ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன; பிரளய காலத்தில் நீரிலேயே "லயம்' ஆகிவிடுகின் றன. ஆதலால் இறைவனை நீரின்மூலம் உருவ வழிபாட்டிற்கு கொண்டுவருவதே பூரண கும்பத்தின் தத்துவம். கும்பம் (குடம்)- உடல். குடத்தில் உள்ள நீர்- ரத்தம். உள்ளே போடப்படும் ரத்தினங்கள்- சுக்கிலம். கூர்ச்சம்- நாடி. குடத்தின் மேலே சுற்றப்பட்ட நூல்- நரம்புகள். குடத்தின் மேலே போடப்பட்ட துணி (வஸ்திரம்)- தோல். மந்திரங்கள்- உயிர். குடத்தின் மேலுள்ள தேங்காய்- சிரசு, முகம். லம்பகூர்ச்சம்- சிகை (முடி). மாவிலைகள்- ஜடாபாரங்கள். "இப்படி மந்திரங்களின் உதவியுடன் அலங்கரிக்கப்பட்ட குடத்தில், சிவனை எழுந்தருளச் செய்கிறோம்' என்று சிவ ஆகமத்தில் சொல்லப் படுகிறது. எனவே பூரண கும்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் இறைவனாக பாவித்து வணங்க வேண்டும். பொருளறிந்து செய்யப்படும் பூசைகள் மூலம் நாள் முழுவதும் இறை உணர்வில் இருக்கமுடியும். http://www.bairavafoundation.org/

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்